அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய சித்த மருத்துவ பிரிவுகளை ஏற்படுத்தி சித்தமருத்துவர்களை பணியமர்த்தல், பழைய காலியிடங்களுக்கு எம்.ஆர்.பி தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்புதல், NHM பணி நிரந்தரம், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் விரைவில் ஏற்படுத்துதல், சித்தா எய்ம்ஸ் அமைத்தல், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சித்த மருத்துவத்தை இணைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திரு.மா.சுப்பிரமணியம், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர், அவர்களிடம் சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. 
அதுபோல் 1970 ஆம் ஆண்டு அரசாணை படி 49 கோயில்களில் சித்த மருத்துவமனைகள் அமைத்தல், திருக்கோயில் பிரசாதங்களுக்கு புவிசார் குறியீடு பெறுதல், கோயில்களில் மூலிகை நந்தவனம் அமைத்தல் ஆகிய பணிகளில் சித்த மருத்துவர்களை ஈடுபடுத்துதல்
போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி அளித்த மனுவிற்கு ஆவன செய்வதாக நம்பிக்கை அளித்துள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களுக்கு சித்த மருத்துவர்கள் சார்பாக நன்றிகள்.
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், டாக்டர் பி.கே.பார்த்தீபன், டாக்டர் பி.செந்தில்குமார், டாக்டர் பா.சரவணபாண்டியன், டாக்டர் பா.மணிகண்டன்,  டாக்டர் ஜெ.மதன்குமார், டாக்டர் திருவருட்செல்வா, டாக்டர் பா.தினேஷ்குமார் ஆகியோர் சார்பில் சித்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக் சங்கம் மூலமாக வழங்கப்படும் ரூபாய் 1,00,000 ((ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) வரைவு கேட்பு காசோலை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அமைச்சர் அவர்களிடம்  வழங்கப்பட்டது.
#கோரிக்கைகள்
1. 8000க்கும் மேற்பட்ட பட்டதாரி சித்த மருத்துவர் வேலை வாய்ப்பின்றி இருக்கின்றனர், அவர்களுக்கு NHM ல் நிரந்தர பணி வாய்ப்பு, திருக்கோயில்கள், மினி கிளினிக்குகளில் பணிவாய்ப்பு, ரெயில் நிலையம், பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம், ஆகியவற்றில் முழு நேரம் மற்றும் பகுதி நேரம் சித்த மருத்துவர் வேலை வாய்பை ஏற்படுத்தி தருதல். 
2. சித்த மருந்துகளுக்கு தமிழகத்தில் வரி விலக்கு ஏற்படுத்தி தருதல்.
3. சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைத்தல் 
4. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சித்த மருத்துவத்தை இணைத்தல்.
5. பொது மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஆயுர்வேதம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மாற்றி அனைத்து காப்பீட்டு திட்டங்களிலும் சித்த மருத்துவத்தையும் இணைத்தல்.
6. சித்த மருத்துவத்திற்கென தனியாக சித்த மருத்துவ வாரியம் ஏற்படுத்தி அதற்கு உறுப்பினர்களை நியமித்தல்.
7. தனியார் கல்லூரிகளில் பணியாற்றும்  சித்த மருத்துவ ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்பினை உறுதி செய்தல்.
8. சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த சித்த மருந்து ஆய்வு மையத்தை நிறுவுதல். 
9. தமிழக அரசு சார்பில் திருக்கோயில்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் குறைந்தது 5 சென்ட் நிலப்பரப்பில் மரம், செடி, கொடி, சிறுசெடி, தரைபடர் செடி கொண்ட மூலிகை பண்ணையை ஏற்படுத்துதல்.
10. மலை பகுதி மற்றும் வனப்பகுதிகளில் மூலிகைகளை சேகரிக்க சித்த மருத்துவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்.
11. தமிழக அரசு சார்பாக புதிய அரசு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சித்தா எய்ம்ஸ் முழுமையான கட்டமைப்புடன் ஏற்படுத்துதல்.
12. தமிழகத்தில் தயாரிக்கப்படும் சித்த மருந்துகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தொழில் பூர்வமான அனுமதி வழங்க ஆவன செய்தல்
ஆகிய 12 அம்ச கோரிக்கைகள் மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களிடம் வழங்கப்பட்டன. 


மேலும் இந்திய மருத்துவ துறை இயக்குநர் மதிப்பிற்குரிய திரு. கணேஷ் IAS மற்றும் இணை இயக்குநர் டாக்டர் P.பார்த்திபன் அவர்களிடமும் நேரிடையாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.